இன்று முதல் நீங்களும் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்
பொது மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் வகையில் ´ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்´ என்ற வேலைத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமக்கு தேவையான மொழியை தெரிவு செய்துவிட்டு இலக்கம் இரண்டை அழுத்துவதனூடாக இந்த சேவையினை பெற்றுக்கொள்ளலாம்.
தபால் பெட்டி இலக்கம் 123 இற்கு அனுப்புவதவனூடாகவும் மற்றும் இணையத்தினூடாகவும் பொது மக்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.