Breaking News

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும்

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படுதல், அந்த சட்டத்தின் கீழ் மேலும் கைதுகள் இடம்பெறுவதை தடுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த நேர்மையான விசாரணை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இலங்கையின் புதிய அரசாங்கம் நிறைவேற்றவேண்டியுள்ளதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னேற்றகரமான பல செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.