ஞானசார தேரர் சார்பில் பிணை மனு
நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிணையில் விடுவிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில், ஞானசாரரின் சட்டத்தரணியால் குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான விசாரணை அண்மையில் ஹோமகம நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஞானசார தேரர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.
சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்தில் சில பிக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.