பெண் தலைமை குடும்பத்துக்கு புதிய இல்லம் - வடக்கு முதல்வர் கையளிப்பு
யாழ்ப்பாணம் – புத்தூர் பிரதேசத்தில் பெண் தலைமையிலான குடும்பம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் நிதியத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது.
முதலமைச்சர் நிதியத்தினால் செய்துகொடுக்கப்படும் இரண்டாவது இல்லம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் 6 இலடசம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புத்தூர் பிரதேசத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் விஜயம் மேற்கொண்டு பயனாளியிடம் கையளித்தார்.