Breaking News

வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்-அமெரிக்கா

இலங்கையில் வன்னி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் அத்தியாவசியமாகும் என அமெரிக்க அரசாங்கம் அறிவிப்புச் செய்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான அமெரிக்காவின் தூதுவர் கீன் ஹாபர் ஜெனீவாவில் வைத்து இதனை அறிவிப்புச் செய்துள்ளார். வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என முன்வைக்கப்பட்ட பிரேரணையில் எந்தமாற்றமும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், உள்நாட்டு விடயங்கள் தொடர்பான விசாரணையின் போது வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றல் தேவையில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்த வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு மேற்கொள்ளும் விஜயத்தின் பொது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.