Breaking News

மாகாணசபையால் வைரமுத்துவிற்கு எத்தனை கோடி வழங்கப்பட்டது(காணொளி)

இலங்கை முல்லைத்தீவில் வடக்கு மாகாண

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். 

இந்த செய்தியினை நாமும் வெளியிட்டிருந்தோம் இருந்தும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டமை தொடர்பில் சில யாழ் ஊடகநண்பர்கள் உட்பட சிலர் தங்கள் முகநூல்களில் கவிஞர் வைரமுத்து தொடர்பில் இறுதி யுத்தம் தொடர்பிலும் விமர்சனங்களை வைத்துவருகின்ற நிலையில் உண்மையிலேயே வைரமுத்துவை எதற்காக அழைக்க வேண்டும்? அவரை அழைப்பதற்கு வடமாகாணசபையால் பல இலட்சம்ரூபா வழங்கப்பட்டதாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவே என்ற கேள்விகளை இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்படி தகவலை தந்தார்.



உண்மையிலேயே இந்தியாவில் இருக்கின்ற முதன்மை கவிஞர்கள் இருவரில் ஒருவரை அழைத்து எமது உழவர்களை கௌரவிக்க முடிவெடுத்தோம் என்றும் அந்த அழைப்பை திரு வைரமுத்து அவர்களிடம் தெரிவித்தபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டதோடு அதற்கு தனக்கு எந்த கொடுப்பனவோ கௌரவமோ தேவையில்லை என்றும் விமானச் சீட்டு உட்டபட அனைத்து செலவுகளையும் தானே ஏற்று வருவதாகவும் தெரிவித்தாக அமைச்சர் தெரிவித்தார். 

வைரமுத்துவின் பிறந்த தினமான யூலை 13ந்திகதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ‘கவிஞர்கள் திருநாள்’ நிகழ்வில் ஈழத்துக் கவிஞர்கள் இருவருக்கு விருதுடன் 1 இலட்சம் இந்திய ரூபா பணப்பரிசும் வழங்கி கொளரவிக்கப்படும் என கவிப்பேரரசு வைரமுத்து அறிவித்துள்ளார்.

யாழ். நூலக வளாக கேட்போர் கூடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாண இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்தார்.

எழுகலை இலக்கியப்பேரவையின் ஏற்பாட்டில் நடந்த இச்சந்திப்பில் ஏற்புரை வழங்கிய கவிஞர் வைரமுத்து பாராபட்சம் பார்க்காமல் ஈழத்திலிருந்து இரு திறமையான கவிஞர்களைத் தேர்வு செய்து தரும்படி ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார். பரிசுத் தொகையுடன் விருது பெற வரும் இரு கவிஞர்களுக்கான பயணச் செலவையும் தானே ஏற்பதாக கூட்டத்தினரின் கரகோசத்துக்கு மத்தியில் கவிஞர் அறிவித்தார்.

கவிஞர் கை.சரவணனின் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வரவேற்பு கவியினை திருமதி சித்திரா பிரசன்னா வழங்கினார்.வாழ்த்துக் கவியினை வேலணையூர் சுரேஸ் வழங்கினார். தொடர்து யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேஸ்வரன் , அரசறிவியல் பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.



குறிப்பு- எமது அடுத்த பதிவு கவிஞர் வைரமுத்து ஈழத்திற்காக என்ன செய்தார்? என்ற விபரமான கருப்பொருளில் கட்டுரை நாளை வெளிவரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.


தொடர்புடைய முன்னைய செய்தி

தமிழர்களின் வலிகளை ஈழ மகாகாவியமாக எழுதப்போகின்றேன்”-கவிஞர் வைரமுத்து(காணொளி)