Breaking News

சு.க.வை பிளவுபடுத்த மஹிந்த அணி முயற்சி

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இரண்டு தலை­வர்கள் இல்லை. கட்­சியின் தலை­மைத்­து­வத்தை கைப்­பற்றும் நோக்­கத்தில் கட்­சியை பிள­வு­ப­டுத்த மஹிந்த அணி­யினர் முயற்­சிப்­ப­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உப­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

ஒரு சந்­தர்ப்­பத்தில் இரண்டு தலை­மை­ களை ஏற்று செயற்­பட முடி­யாது. அதை யும் தாண்டி செயற்­பட விரும்­பு­ப­வர்கள் கட்­சியை பிள­வு­ப­டுத்­தாது வெளி­யே­று­வதே சிறந்த வழி­மு­றை­யாகும் எனவும் அவர் குறிப்­பிட் டார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினுள் ஏற்­பட்­டுள்ள முரண்­பாட்டுக் கருத்­துகள் மற்றும் மஹிந்த அணியின் தனித்த பயணம் தொடர்பில் கட்­சியின் உப­செ­ய­லா­ள­ரிடம் ஊடகம் ஒன்று வினாவிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முயற்­சிகள் தான் நாட்டை இத்­தனை கால­மாக சரி­யான பாதையில் வழி­ந­டத்தி வரு­கின்­றது. எனினும் கடந்த காலங்­களில் நாம் ஒரு­சில தவ­று­க­ளையும் செய்­துள்ளோம். எவ்­வாறு இருப்­பினும் கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் நாட்டில் ஏற்­பட்ட மாற்­றத்­துடன் நாடும் கட்­சியும் வேறு ஒரு திசையை நோக்கி பய­ணிக்க ஆரம்­பித்­து­விட்­டது.

இதில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கைகோர்த்து கூட்­டணி அர­சாங்­கத்தை அமைத்­துள்ளோம். பொது­வாக பிர­தான இரண்டு கட்­சி­களும் மாறு­பட்ட கொள்­கையில் பய­ணிக்கும் கட்­சி­யாக இருந்­தாலும், அர­சியல் முறை­மையில் மாற்றம் இருந்­தாலும் முரண்­பா­டுகள் இருந்­தாலும் பொது­வான ஒரு நோக்­கத்தை வெற்­றி­கொள்ள பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றாக பய­ணிக்க வேண்­டிய ஒரு நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

இதை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். எனினும் கட்­சிக்குள் ஒரு­சில முரண்­பா­டுகள் உள்­ள­தையும் நாம் மறுக்­க­வில்லை. அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு­சாரார் இருந்­தாலும் முன்னாள் ஜனா­தி­ப­தியை பலப்­ப­டுத்த வேண்டும் என்ற நோக்­கத்தில் தம்மை எதி­ர­ணி­யாக வெளிப்­ப­டுத்தும் ஒரு சிலரும் கட்­சிக்குள் உள்­ளனர்.

கட்­சியை பிள­வு­ப­டுத்தும் நோக்­கத்தில் இவர்கள் செயற்­ப­டு­கின்­றமை தெளி­வாகத் தெரி­கின்­றது. அதேபோல் அதி­கா­ரத்தை மீண்டும் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இவர்கள் இருக்­கின்­ற­மையும் தெரி­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இப்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் செயற்­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­ப­திக்கு கட்­டுப்­பட வகை­யி­லேயே கட்­சியின் தீர்­மா­னங்­களும் மேற்­கொள்­ளப்­படும்.

எந்த சந்­தர்ப்­பத்­திலும் கட்­சியில் ஒரு தலைவர் மட்­டுமே செயற்­பட முடியும். ஒரு சந்­தர்ப்­பத்தில் இரண்டு தலை­மை­களை கொண்டு செயற்­பட முடி­யாது. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­ன­ராக செயற்­படும் நிலையில் கட்­சியின் மத்­தி­ய­குழு தீர்­மா­னங்­க­ளையே ஏற்­று­கொள்ள வேண்டும். அதையும் தாண்டி செயற்­பட விரும்­பு­ப­வர்கள் கட்­சியை பிள­வு­ப­டுத்­தாது வெளி­யே­று­வதே சிறந்த வழி­மு­றை­யாகும்.

இன்று கட்­சியை பிள­வு­ப­டுத்த நினைப்­ப­வர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைத்துவத்தை வீழ்த்துவதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் கரங்களை பலப்படுத்த செயற்படுகின்றனர். அந்த சூழ்ச்சியில் மஹிந்த ராஜபக் ஷவும் சிக்கிக்கொள்ள போகின்றார என்ற தீர்மானத்தை அவர் எடுக்க வேண்டும். எவ்வாறு இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும்வரையில் தான் இவர்களுக்கு பலம் என்றார்.