Breaking News

பொறுப்புக்கூறலில் விலகி நிற்க முடியாது - ஜனாதிபதி கூறுகிறார்

யுத்­தக்­குற்­றச்­சாட்டு தொடர்பில் சர்­வ­தேச தரப்­பிடம் பொறுப்­புக்­கூ­ற­வேண்­டிய மிகப்­பெ­ரிய பொறுப்பு எமக்கு உள்­ளது. பொறுப்­புக்­கூ­றலில் பின்­னின்றால் சர்வ­தேசம் எம்மை ஒதுக்கி வைத்­து­வி­டு­வ­துடன் குற்­ற­வா­ளிகள் என்ற முத்­தி­ரையை பொறித்­து­விடும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

எனது பதவிக் ­காலம் முடியும் முன்னர் இந்த நாட்­டுக்கு எதி­ரான சர்­வதேச அழுத்­தங்­களில் இருந்து முழு­மை­யாக இந்த நாட்டை விடு­வித்து நாட்டில் நல்­லி­ணக்­கத்தை முழு­மை­யாக பலப்­ப­டுத்­தியே செல்வேன் எனவும் அவர் வாக்­கு­று­தி­ய­ளித்தார்.

யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட, அங்­க­வீ­ன­மான படை­வீ­ரர் கள் மற்றும் உயி­ரி­ழந்த படை­வீ­ரர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கும் வடக்கு கிழக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கும் சேம­நல மேம்­பாட்­டிற்­காக விசேட சலு­கைகள் வழங்­கப்­படும் 'விரு­சர' சிறப்­பு­ரிமை அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று அல­ரி­மா­ளி­கையில்நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில்.

நாட்டின் தேசிய பாது­காப்பு விட­யத்தில் முக்­கிய பொறுப்பு வகிக்கும் முப்­ப­டை­களும், பொலிஸ் பிரி­வி­னரும் ஒன்­றி­ணைந்து பாது­காப்பு படை­யி­னரின் நன்­மையை கருத்­தில்­கொண்டு 'விரி­சர' சிறப்­பு­ரிமை அட்டை வழங்க தீர்­மா­னித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். குறிப்­பாக எமது நாட்­டைப்போல் உலகில் அனைத்து நாடு­க­ளிலும் அந்த நட்டு மக்­களின் உரி­மை­க­ளையும் பாது­காப்­பையும் ஐக்­கி­யத்­தையும் பல­ப­டு­து­வ­து­வது அந்த நாட்டின் பாது­காப்பு படை­யி­ன­ரே­யாகும். அவ்­வா­றான நிலையில் சில சந்­தர்ப்­பங்­களில் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் பாது­காப்பு படை­யினர் அழுத்­தங்­களை எதிர்­கொள்ள வேண்­டுய நிலைமை ஏற்­படும். உலகில் பல நாடுகள் இன்றும் அவ்­வா­றான அழுத்­தங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். இலங்­கையும் அவ்­வா­றான அனைத்து அழுத்­தங்­க­ளுக்கும் முகங்­கொ­டுத்து வந்­துள்­ளது.

பிரித்­தா­னிய ஆக்­கி­ர­மிப்பில் இருந்து நாம் விடு­பட்ட போதிலும் அன்­றி­லி­ருந்து சில தசாப்தம் கடந்­தாலும் பின்னர் விடு­த­லை­பு­லி­களின் ஆக்­கி­ர­மிப்பு நாட்டில் பல­ம­டைந்­தது. அவ்­வா­றான நிலையில் எமது பாது­காப்பு படை­யினர் 25 ஆண்­டு­க­ளாக பல தியா­கங்­களை செய்து யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தனர். நாட்டில் மூவின மக்­க­ளையும் பாது­காத்து நாட்டை பலப்­ப­டுத்தும் மிகப்­பெ­ரிய போராட்­டத்தை எமது இரா­ணுவம் மேட்­கொண்­டுள்­ளது.

இந்த நாட்டில் அனைத்து மக்­களின் உரி­மை­களை பாது­காக்­கவும், சகல இனத்­தையும் பாது­காக்­கவும் நாம் போரா­டி­யது மறந்­து­விட முடி­யாது. இன்று நாம் நவீன யுகத்தில் வாழ்ந்து வரு­கின்றோம். ஆனால் கடந்த கால கசப்­பான நினை­வுகள் எம்­மை­விட்டு நீங்­க­வில்லை. இன்று நவீ­னத்­துவம் அதி­கா­ரத்தை தக்­க­வைக்கும் ஒரு சாத­க­மா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

எமது நாட்டில் நடை­பெற்ற இந்த மூன்­று­த­சாப்­த­கால யுத்தம் நாட்டை முழு­மை­யாக சீர­ழித்­தது. அபி­வி­ருத்­தியை முழு­மை­யாக வீழ்த்­தி­யது, நாட்டில் மதங்­க­ளுக்கு இடை­யிலும், இனங்­க­ளுக்கு இடை­யிலும் முரண்­பா­டுகள் ஏற்­பட ஆரம்­பித்­தது. எமது இரா­ணுவம் பல பின்­ன­டை­வு­களை கண்­ட­போது இந்­தி­யாவின் உத­வியை கூட நாம் நாடினோம். ஆனால் அதிலும் எமக்கு நன்மை அளிக்­க­வில்லை. அவ்­வா­றான நிலையில் மிக நீண்­ட­கால போராட்­டத்தில் பின்னர் எமது இரா­ணு­வத்தின் மூல­மாக யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்தோம். அதில் இருந்து திரும்பிப் பார்க்­கும்­போது இழப்­புகள் பல கண்­முன்னே தெரிந்­தது. இந்த வெற்­றியின் பின்னால் எமது இரா­ணுவ வீரர்கள் செய்த தியாகம் எதையும் மறக்க முடி­யாது. அதேபோல் எந்த சந்­தர்ப்­பத்­திலும் எமது இரா­ணு­வத்தை கைவி­டவும் முடி­யாது.

புதிய அரசு என்ற ரீதியில் புதிய பாது­காப்பு திட்டம் ஒன்றை உரு­வாக வேண்டும். எமது பாது­காப்பு படை­யி­னரின் பலத்­தையும்,சலு­கை­க­ளையும் உறு­தி­ப­டுத்தி அதன் மூல­மாக தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்டும். நாம் மீண்டும் நாட்டின் தேசிய பாது­காப்பை சீர­ழிக்க இட­ம­ளிக்க முடி­யாது. அதேபோல் இந்த நாட்டில் யுத்தம் ஏன் ஏற்­பட்­டது என்­பதை கவ­னத்தில் கொள்ள வேண்டும். அந்த கார­ணங்­களை கவ­னத்தில் கொண்டு மீண்டும் அவ்­வா­றான எந்த பாதிப்பும் வராத வகையில் செயற்­பட வேண்டும்.

நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை இன்று சிலர் கேலிக்கு உட்­ப­டுத்­து­கின்­றனர். சிலர் கடு­மை­யாக விமர்­சிக்­கின்­றனர். சிலர் இரத்தம் பற்றி கதைக்­கின்­றனர். யாராக இருந்­தாலும் எந்த இன­மாக,மத­மாக இருந்­தாலும் அனை­வ­ருக்கும் இருப்­பது ஒரே இரத்­தம்தான். இரத்­தத்தில் மதமோ, இனமோ இல்லை. குறிப்­பாக நாட்டில் யுத்தம் நடந்தால் அது ஏன் என்ற கார­ணத்தை கண்­ட­றிந்து மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்­ப­டாது தடுப்­பது தொடர்பில் சிந்­திக்க வேண்டும். இந்த நாட்டில் கல்­லி­னாலும், மண்­ணி­னாலும், இரும்­பு­கம்­பி­க­க­ளி­னாலும் நல்­லி­ணக்கம் என்ற விட­யத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.

மூவின மக்­களும் ஒன்­றி­ணைந்து நாட்டின் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­க­வேண்­டி­யது அனை­வ­ரதும் கட­மை­யாகும். அதேபோல் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைப்­பது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டத்தை ஏற்­ப­டுத்­தும்­போது அதை தடுக்க அனைத்து தரப்­பிலும் இன­வாதக் கருத்­துகள் எழும். நாட்டை குழப்ப சிலர் முயற்­சிப்­பார்கள். ஆனால் அதையும் தாண்டி நாட்டின் நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்த வேண்டும்.

மேலும் எமக்கு எதி­ராக பல குற்­றங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக இரா­ணு­வத்தை தண்­டிக்­கப்­போ­வ­தா­கவும், புல­னாய்வு பிரிவை காட்­டிக்­கொ­டுக்கப் போவ­தாகும், நாட்டை பிரிக்க போவ­தா­கவும் சர்­வ­தேச தரப்பின் மூல­மாக நாட்டின் சுயா­தீன தன்­மையை அழிக்­கப்­போ­வ­தா­கவும் பல குற்­றங்கள் முன்­வைக்­கின்­றனர். ஆனால் நாட்டின் தலைவர் என்ற வகையில் அனைத்து குற்­றச்­சாட்­டு­க­ளையும் நான் நிரா­க­ரிக்­கின்றேன்.

கடந்த கால ஆட்­சியின் போதும் ஆட்சி மாற்­றத்­தின்­போதும் அர­சாங்கம் என்ற வகையில் சர்­வ­தேச தரப்பின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­க­வேண்­டிய கடமை எமக்கு உள்­ளது. நாடு என்ற ரீதியில் தனி­யாக வாழ முடி­யாது. இன்­றைய கால­கட்­டத்தில் அனைத்து நாடு­களின் ஒத்­து­ழைப்­புடன் தான் முன்­செல்ல வேண்டும். அதேபோல் நாட்டில் வாழும் அனைத்து மக்­க­ளையும் இன மத பேதம் இன்றி அனை­வ­ரையும் பாது­காக்க வேண்­டிய பொறுப்பு எமக்கு உள்­ளது.

நாட்­டுக்கு உள்ளும் சர்­வ­தேச மடத்­திலும் கடந்த முன்­னைய அர­சாங்­கத்­திற்கும் எமக்கும் எதி­ராக எழுப்­பப்­பட்­டுள்ள கேள்­வி­க­ளுக்கு சரி­யாக பதி­ல­ளிக்க வேண்­டிய தேவை உள்­ளது. அவ்­வாறு பதி­ல­ளிக்­காது புறக்­க­ணித்து செல்ல முடி­யாது. அவ்­வாறு புறக்­க­ணித்து சென்றால் சர்­வ­தேச மட்­டத்தில் எம்மை ஒதுக்கி வைத்­து­வி­டு­வார்கள். நாட்­டினுள் எழுந்­துள்ள குழப்­பங்­களை, மக்­களின் கோரிக்­கை­களை தீர்க்க முடி­யாது. எமது பாது­காப்பு தரப்பின் மீது சுமத்­தி­யுள்ள குற்­ற­சாட்­டு­களை பொய்­யென நிரு­பிக்க முடி­யாது. ஐக்­கிய நாடு­களின் அங்­கீ­கா­ரத்தை எம்மால் பெற­மு­டி­யாது.

இந்த நாட்டில் யுத்­தத்தின் போது நடந்­த­தாகக் கூறப்­படும் குற்­ற­சாட்­டுகள் உள்­ளது. அவை தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றி­யக்­கோரி அழுத்­தங்கள் எழுந்­துள்­ளது. அந்த குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தக்­கோரி அழுத்தம் எழுந்­துள்­ளது. ஆனால் இந்த விசா­ர­ணை­களின் மூலம் உண்­மை­களை கண்­ட­றி­வது மட்­டுமே அடிப்­படை நோக்­கமே தவிர எந்த கார­ணம்­கொண்டும் எமது இரா­ணு­வத்தை தண்­டிப்­பது அல்ல நோக்கம். பொது­மக்­க­ளுக்கு நாம் பொறுப்­புக்­கூறும் வகையில் தான் இந்த விசா­ர­ணையை செய்­ய­வேண்­டி­யுள்­ளது. அவ்­வாறு இல்­லாது நாம் பின்­வாங்­கினால் சர்­வ­தே­சமும் நாட்டு மக்­களும் எம்மை குற்­ற­வா­ளி­க­ளாக பார்க்கும் நிலைமை ஏற்­பட்­டு­விடும். அதற்கு எந்த சந்­தர்ப்­பத்­திலும் இட­ம­ளிக்க முடி­யாது. சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை, சர்­வ­தேச உத­வி­களை தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. இன்று எமக்கு எதி­ராக குரல் எழுப்பும் நபர்­களின் கதை­களை கேட்டு ஐக்­கிய நாடு­களின் உறுப்­பு­ரி­மையில் இருந்து வெளி­யே­றவோ, சர்­வ­தேச மட்­டத்தில் எமக்கு இருக்கும் ஒத்­து­ழைப்பில் இருந்து நீக்­கவோ எம்மால் முடி­யாது.

எனது பத­விக்­காலம் முடியும் முன்னர் இந்த நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களில் இருந்து முழுமையாக இந்த நாட்டை விடுவித்து நாட்டில் நல்லிணக்கத்தை முழுமையாக பலப்படுத்தியே செல்வேன் என வாக்குறுதியளிக்கின்றேன். பழிவாங்கும் நோக்கத்தில் என்னால் செயற்பட முடியாது. உண்மையில் இந்த நாட்டில் ஏன் யுத்தம் இன்று ஏற்பட்டது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். அதை விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.

அதேபோல் இந்த நாட்டு மக்கள் எம்மை நம்பி எமக்கு மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அந்த பொறுப்புகளை சரியாக செய்ய வேண்டும். நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மிகவும் முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றும் பயணத்தில் விரைந்து பயணித்து செல்கின்றோம். எமக்கு எதிராக எழும் அச்சுறுத்தல்களை கண்டு நாம் அஞ்சப்போவதில்லை. நாம் அச்சத்தில் பின்வாங்கபொவதில்லை அவர் குறிப்பிட்டார்.