ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு ஹோமாகம நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, குறித்த உத்தரவு நீதவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளர் பிரகீத்தின் மனைவி சந்தியாவுக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்துள்ளமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை போன்ற குற்றங்களுக்காகவே இவர்மீது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.