யுத்தக்குற்றம் குறித்த உள்ளக பொறிமுறையில் சர்வதேசத்தின் தலையீடு தேவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரரணைகளுக்கான அரசாங்கத்தின் உள்ளக பொறிமுறை செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் உதவி அவசியமற்றது எனவும், உள்ளூரிலேயே நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச ரீதியில் பணியாற்றிய நீதிபகள் மற்றும் சட்டடத்தரணிகள் இருப்பதாகவும் கடந்த 21ஆம் திகதி சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இந்த கோரிக்கை வெளியாகியுள்ளது.