Breaking News

பேரவையின் அரசியல் தீர்வு திட்ட யோசனை சனிக்கிழமை வெளியீடு

தமிழ் மக்கள் பேரவையால் நியமிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட தயாரிப்பிற்கான உபகுழுவின் அறிக்கை, எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இதன் முதல் பிரதி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டு, அவர் அதனை பகுப்பாய்வு செய்து வெளியிடுவாரென தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தமது அபிலாஷைகளை முன்வைப்பது குறித்து கலந்துரையாடி வருவதோடு பொதுமக்களிடமும் கருத்துக் கோரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் அரசியல் தீர்வு திட்டத்தை புதிய அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்வது குறித்து தமிழ் மக்கள் பேரவையும் குழுவொன்றை அமைத்து ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.