Breaking News

மஹிந்த பக்கம் சாய்ந்தார் விஜேதாச

நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கோ அல்லது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கோ அழைக்கப்பட்டார் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றவாளி என கருதிவிடக் கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி, பெலிகஹவில் அமைக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் நிர்மானப் பணிகளை அவதானிப்பதற்காக கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

ஒருவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுவது நீர்மன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் ஆகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் மேற்கொள்ளப்படும் சகல விசாரணைகளும் சுயாதீனமானவை. நீதிமன்றத் தீர்ப்புக்களுக்கு எந்தவித அரசியல் நிர்ப்பந்தங்களும் இல்லை. அதுவரை அவர் குற்றமற்றவர் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.