Breaking News

சட்டவிரோத குடியேற்றம் குறித்து ஆராய விசேட குழு

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் குறித்து ஆராய்வதற்கு, விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் என்பன பற்றி இந்த விசேட குழுவினால் ஆராயப்படவுள்ளதோடு, குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விசேட குழுவிற்கு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கிங்ஸ்லி பெர்ணான்டோ தலைமை வகிக்கின்றார். அத்துடன், காணி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்களும் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்கள பிரதானிகளும் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.