Breaking News

சொத்து மோசடியில் கம்மன்பில சிக்கினார்

அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவரின் சொத்தை ஏமாற்றி விற்பனை செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக குற்றச்சாட்டை குறித்த வர்த்தகரின் சட்ட அங்கீகாரத்தை கொண்டு எல்.ஐ.பெரேரா என்பவர் நேற்று பொலிஸில் முறைப்பாடாக செய்துள்ளார்.“ப்ரோம்பில்” என்ற தேயிலை தொழிற்சாலையை போலியான ஆவணங்களை தயாரித்து உதய கம்மன்பில வேறு ஒரு நிறுவனத்துக்கு 190 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்துவிட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பேன் ஏசியா வங்கியின் 110 மில்லியன் ரூபா பங்குகளை முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக கம்மன்பிலவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலேயே புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அதேநேரம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அவுஸ்திரேலிய வர்த்தகரான சாதிக் என்பவர் இலங்கைக்கு வர தயாராகவுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.