Breaking News

விக்னேஸ்வரனை பதவி நீக்கும் திட்டமில்லை: சம்பந்தன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் சர்ச்சை காணப்பட்ட போதிலும், முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் திட்டங்கள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், விக்னேஸ்வரனிற்கும் இடையில் முறுகள் நிலை ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.