எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனை ஏற்கமுடியாது!
மக்கள் விரும்பினால் தான் அரசியலில் இறங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ, நாட்டுக்கு இன்று பலமான எதிர்க்கட்சி ஒன்று அவசியமாகியிருக்கின்றது எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.
கொழும்பில் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்காக ஆஜரான கோதாபாய ராஜபக்ஷ, விசாரணை முடிவடைந்து வெளியே வந்தபோது ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டார்.
“இன்று பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் தெரிவித்தார். இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சென்று வருவதற்கு போரை தாம் முடித்துவைத்தமைதான் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.