மன்னாரில் வீட்டிற்குள் புகுந்து துணிகர கொள்ளை
மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பத்தில் பல லட்சம் ரூபா பெறுமதியான நகை, பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளர்க்ள மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மன்னார் எழுத்தூர் கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட வீடு ஒன்றினுள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கி இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். துணிகரமான இந்த கொள்ளைச் சம்பவத்தினால் அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதன்போது, மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த முங்கன் பாடசாலையின் ஆசிரியரான 47 வயதான நிவீன் பெணாண்டோ என்பவரது வீட்டிலேயே கொள்ளையிடப்பட்டுள்ளது.
உள்ளே நுழைந்து கொள்ளையிட்ட மூன்று கொள்ளையர்கள் இருவர் கறுப்புத்துணியினால் முகத்தைக் கட்டியிருந்துள்ளனர். கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களை தாக்கி ஆயுத முனையில் கொள்ளையிட்டுள்ளனர். இதன்போது, ஆசியரியர் அவரின் மணைவி மற்றும் தந்தை ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பிச் சென்ற நிலையில் காணமடைந்த ஆசிரியர் அபாயக்குரல் எழுப்பிய நிலையில் அயலவர்கள் குறித்த வீட்டிற்குச் சென்று, இறத்த வெள்ளத்தில் காணப்பட்ட மூவரையும் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் இடம் பெற்ற வீட்டிற்கு விரைந்து வந்த பொலிஸார் தடயங்களை பார்வையிட்டதோடு மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.