வடக்கு முதல்வரை சந்தித்தனர் ஐ.நா அதிகாரிகள்
ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி லயோரி விசேபேர்க் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வடமாகா முதலமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, வடமாகாண மக்களின் பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கை புலம்பெயர் தமிழர்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.