கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 21 ஆம் திகதி
பல விடயங்கள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றை, தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 21 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த தீர்மானித்துள்ளனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் ஆதரவுடன் நடத்த தீரமானித்துள்ளனர்.
நடத்த உள்ள விசேட கலந்துரையாடல் தீர்மானத்தில் அரசியலமைப்பு திருத்தம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, தேர்தல் முறைகள் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கலந்துறையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.
இது தொடர்பாக எமது செய்தி பிரிவு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜவிடம் வினவிய பொழுது அவர் இவ்வாறு தெரிவித்தார் "தழிழ் மக்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது" என்றார்.
இதேவேளை, வடமாகாண முதல்லமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.