பிரபாகரன் வரலாறாகிவிட்டார் ஆனால் அவரது இலட்சியம் ?-மகாத்மா காந்தியின் பேரன் கேள்வி
'வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாறாகிவிட்டார்.
ஆனால், அவரது லட்சியத்துக்கு என்ன ஆனது? அதுவும் பழைய வரலாற்றுச் சம்பவமாகிவிட்டதா?- அல்லது தலைமறைவாகியிருந்து அந்த லட்சியம் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுமா?' என்று கேள்வி எழுப்பினார் கோபாலகிருஷ்ண காந்தி.
'பிரிவினைவாதம் என்பது உடனடியான நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறிவிடமுடியும். ஆனால், அந்த உணர்வு மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் வரையில் அது முற்றாக இல்லாமல் போய்விட்டதாக சொல்லமுடியாது' என்றார் 2000-ம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிய கோபாலகிருஷ்ண காந்தி.
புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் வெளியாகின்ற விமர்சனங்கள் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு பேசினார்.
'நாங்கள் நாட்டை இரண்டாக பிளவுபடுத்த போவதாகவும்..பௌத்த மதத்துக்கு உள்ள இடத்தை இல்லாமல் செய்யப்போவதாகவும்...வெளிநாட்டு ஆலோசனைகளின்படி பாதுகாப்பு படையினரை பலவீனப்படுத்தி, தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தப் போவதாகவும் சிலர் கூறுகின்றனர்' என்றார் மைத்திரிபால சிறிசேன.
'ஆனால் நீங்கள் சொல்வதை செய்வது எங்களின் முயற்சி அல்ல. உங்களுக்கு புரியாததை, உங்களுக்கு தெரியாததை செய்வது தான் எங்களின் நோக்கம் என்று அவர்களுக்கு நான் கூறுகின்றேன்' என்றார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.