தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும்!
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்கட்சி தரப்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளதனை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.தேர்தல்கள் உரிய தருணத்தில் நடத்தப்படுவதே சரியான ஜனநாயகம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.