Breaking News

பேரவையின் செயற்பாடுகள் தடையின்றி நடைபெறுகின்றது - கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தடையின்றி நடைபெறுவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.இது தொடர்பில் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.இந்த செய்தியில் உண்மை இல்லை.

தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்டத் தயாரிப்புக்கான உபகுழு தமது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.அதன் அறிக்கை விரைவில் முன்வைக்கப்படும். அதன் பின்னரே தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.