Breaking News

புதிய யாப்பு குறித்து பிரதமரின் விசேட அறிவிப்பு இன்று

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.

இன்று முற்பகல் 10 மணி அளவில் அலரிமாளிகையில் இருந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், புதிய அரசியல் யாப்பு தொடர்பான மக்கள் கருத்து கோரும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொழும்பில் அமைந்துள்ள அரசியல் யாப்பு தொடர்பான மக்கள் கருத்து கோரும் குழுவின் செயலகத்தில், பொது மக்கள் தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும்.இதற்காக தொலைபேசி, தொலைநகல் மற்றும் அஞ்சல் ஆகியன மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

0112 437 676 தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 0112 328 780 என்ற தொலைநகல் இலக்கம் ஊடாக பொது மக்கள் தமது கருத்துக்களை முன் வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.