காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க கோரிக்கை
காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு அந்த ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
அந்த ஆணைக்குழுவின் காலம் பெப்ரவரி மாதம் 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. ஆகவே ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச். டப்ளியூ குணதாச தெரிவித்தார்.
காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கத்தினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்நிலையில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டி உள்ளதால் ஆணைக்குழுவின் காலத்தை நீடிப்பது அவசியமாகும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.