Breaking News

ஆனையிறவில் ரயிலில் மோதுண்டு இராணுவ வீரர் பலி

கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ரயிலில் மோதுண்டு இராணுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனையிறவு இராணுவ சோதனைச் சாவடிக்கு முன்பாக அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த கடுகதி ரயிலில் மோதுண்டதை அடுத்தே குறித்த இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

இந்நிலையில் மேற்படி விபத்துச் சம்பவத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.