வண. இராயப்பு ஜோசப் பதவி துறப்பு
மன்னார் ஆயர் அதி. வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பதவித்துறப்பை திருச்சபை சட்ட எண் 401 பகுதி 1க்கு அமைவாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளதையடுத்து இலங்கைக்கான அபோஸ்த்தலிக்க தூதுவர் இந்த அறிவிப்பை உத்தியோக பூர்வமாக நேற்று அறிவித்தார்.
மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வரை திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் அதி. வணக்கத்திற்குரிய ஜோசப் கிங்ஸிலி சுவாம்பிள்ளை ஆண்டகையை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்த்தலிக்க பரிபாலகராக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 மணி அளவில் வத்திகானில் இருந்து பரிசுத்த பாப்பரசரால் இந்த அறிவிப்பை விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை தெரிவித்தார்.