Breaking News

எகிறிய ஆர்னோல்ட், சயந்தன்! அடக்கிய அனந்தி,சிவாஜிலிங்கம் !!

‘வடக்கு முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது!
அழுத்திக் கூறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்’ என்று தலைப்பிட்டு தமிழரசுக் கட்சி ஆதரவு ஊடகங்கள் சில பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களும் விக்கினேஷ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றதை விரும்பவில்லை என்ற பாணியில் செய்தியாக்கின.
ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தி உரையாற்றியவர்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான ஆர்னோல்ட், சயந்தன் மற்றும் விந்தன் ஆகியோர் மட்டுமே என்பதே உண்மையாகும்.

முதலமைச்சர் உடனான சந்திப்புக்கு முன்னர், யாழ் யு.எஸ் ஹோட்டலில் ஆர்னோல்ட் தலைமையில் கூடிய மேற்படி மாகாண சபை உறுப்பினர்கள் முதல்வருக்கு எதிராக எப்படிப் பேசுவது என்பதை தங்களுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டார்கள். இவர்கள் மூவருக்குமான நெறிப்படுத்தலை சுமந்திரன் நேரடியாக வழங்கியதாக கூறப்படுகின்றது.

அதன்பின்பு இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இச் சிறு குழு தாங்கள் ஏற்கனவே செய்த ஒத்திகைக்கு அமைய நாடகத்தை அரங்கேற்றின. இவர்களின் இந்த நாடகத்தை இனம் கண்டுகொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் மௌனம் காத்த நிலையில் சிவாஜிலிங்கம் அவர்களும் அனந்தி சசிதரன் அவர்களும் அவர்களுடைய கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

ஆனால் அங்கு நடந்த அனைத்தையும் மறைத்து வெறும் நான்கு மாகாண சபை உறுப்பினர்கள் பேரவையிலிருந்து முதல்வரை விலகி இருக்குமாறு கூறியதை அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் வேண்டுகோள் விடுத்ததாக யாழிலிருந்து வெளியாகும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் பத்திரிகை செய்தியை வெளியிட அதை தமிழரசுக் கட்சிய ஆதரவு ஊடகங்கள் மீள்பிரசுரம் செய்து மகிழ்ந்தன.

நடைபெறப்போகும் யாழ்மாநகர சபைத்தேர்தலில் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டு மாநகரசபை மேயராக கொண்டுவரப்படுவார் என தமிழரசுக்கட்சி வட்டாரங்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.