Breaking News

குழந்தை “அய்லான்” னை கேலி செய்யும் “சார்லி ஹெப்டோ”

கடலோரத்தில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிரிய குழந்தையையும் கேலி செய்யும் “சார்லி ஹெப்டோ”

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயந்து அகதிகளாக ஐரோப்பாவிற்கு சென்ற சிரியா நாட்டு குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறு குழந்தை அய்லான் கடலில் மூழ்கி பலியான சம்பவத்தை கேலி செய்யும் வகையில் சர்ச்சைக் குரிய பிரபல பிரான்ஸ் பத்திரிகையான சார்லி ஹெப்டோ கேலிசித்திரம் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கடலோரத்தில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அய்லானின் புகைப்படம், உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு இதழான ‘சார்லி ஹெப்டோ’ கேலிசித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த கார்ட்டூனில், ஏசு கிறிஸ்து போன்ற தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைபோலவும், அருகே, சிரியா நாட்டு குழந்தை கடலில் மூழ்கிய படமும் வரையப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்தவர்கள் நீரில் மேல் நடக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய குழந்தை நீரில் மூழ்கத்தான் முடியும் என்றும் அந்த கார்டூன் விளக்க குறிப்பு வேறு கொடுத்துள்ளது. இந்த கேலிசித்திரத்திற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.