பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சருடன் சுமந்திரன் சந்திப்பு
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் நேற்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு மாற்றம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்தப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று காலை இலங்கை வந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் இன்று
யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.