Breaking News

ஆளும் கட்சியில் இணையும் கூட்டு எதிர்க்கட்சியினர்

கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர்.குறித்த ஆறு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக ஏற்கனவே ஆறு பிரதி அமைச்சுப் பதவிகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயம் குறித்து குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் உயர் மட்டத்தினருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.பிரதி அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

காலி, இரத்தினபுரி, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே எதிர்வரும் இரண்டு வாரங்களில் பிரதி அமைச்சுப் பதவி பெற்றுக்கொள்ள உள்ளதாக பிரபல பத்திரிகையொன்று பிரதான செய்தியாய் வெளியிட்டுள்ளது.