யாழ்.வருகிறார் சுஸ்மா
இந்திய – இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய – இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்துக்கு வரும் பெப்ரவரி 05 மற்றும் 06ஆம் நாள்கள் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.இதில் பங்கேற்க இலங்கை செல்வும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது, இந்தியா புனரமைத்துக் கொடுக்கும் துரையப்பா விளையாட்டரங்கை அதிகாரபூர்வமாக கையளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இதற்காக குறித்த காலக்கெடுவுக்குள் விளையாட்டரங்க புனரமைப்புப் பணிகளை முடிக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.