Breaking News

தாஜுதீன் கொலை விவகாரம் - யோசித விரைவில் கைது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாகவே, யோசித ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.யோசித ராஜபக்சவுக்கும், வசீம் தாஜுதீனுக்கும் இடையில் நிலவிய பனிப்போரின் காரணமாகவே, இந்தக் கொலை இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, முன்னைய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கடந்தவாரம் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.