ராஜபக்ஷ அருட்காட்சியகத்தை சுற்றிவளைத்தது FCID
மெதமுலனவில் அமைக்கப்பட்டுள்ள டி.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகம் குறித்து நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவினர் (FCID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த தாழ்நிலப் பகுதியை நிரப்புதல், மறுசீரமைத்தல் கூட்டுத்தாபனத்தின் பல மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளதாகவும், இந்த மோசடி நிர்மாணப் பணிகள் குறித்து கண்காய்வாளர் சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
பாதுகாப்பு அமைச்சின் அந்நாள் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் அனுமதியுடன் இதற்கான நிதி பயன்பாடு இடம்பெற்றுள்ளது.
இந்த மோசடியான கொடுக்கல், வாங்கல் குறித்து முறைபாடு கிடைத்துள்ள நிலையில், இந்த நிதியை மீள செலுத்துவதாக டி.ஏ.ராஜபக்ஷ நிதியம் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.