வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் கருணாநிதி
பலத்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் முடிச்சூர் பகுதியில், திமுக தலைவர் கருணாநிதி நிவாரண உதவிகளை இன்று (வியாழக்கிழமை) வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர் பகுதிக்கு வந்த கருணாநிதி, அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேருக்கு திமுக சார்பில் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார். பிறகு, மணிமங்கலம் அருகே வரதராஜபுரத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அவர் வழங்கினார்.
திமுக சார்பில் வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.