நியூசிலாந்திலும் அதிரடியாய் அசத்தும் ஜெயவர்தன
நியூசிலாந்தில் நடந்து வரும் உள்ளூர் டி20 போட்டியில் ஜெயவர்த்தனேயின் அதிரடியால் சென்ட்ரல் டிஸ்டிக் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் ஜோர்ஜி பை சூப்பர் ஸ்மாஷ் ( Georgie Pie Super Smash) டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் சென்ட்ரல் மற்றும் நார்த்தன் டிஸ்டிக் அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற நார்த்தன் டிஸ்டிக் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
கோரே ஆண்டர்சனின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்தது. ஆண்டர்சன் 35 பந்தில் 47 ஓட்டங்கள் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்ட்ரல் அணிக்கு தொடக்க வீரர்கள் ஜார்ஜ் வொர்கர், ஜெயவர்த்தனே அதிரடி தொடக்கம் கொடுத்தனர்.
வொர்கர் 39 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அசத்திய ஜெயவர்த்தனே அரைசதம் கடந்தார். அவர் 59 பந்தில் 17 பவுண்டரி 2 சிக்சர் உட்பட 97 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வில் எங் 9 பந்தில் 2 சிக்சருடன் 19 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதனால் 20 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து சென்ட்ரல் 158 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
97 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்ட ஜெயவர்த்தனே தொடர்ச்சியாக 2வது முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 8 போட்டிகளில் பங்கேற்ற சென்ட்ரல் அணிக்கு இது 3வது வெற்றியாகும்.