அரசாங்கத்திற்கு எதிராக கறுப்புக்கொடி
அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒருவருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால் கறுப்புக்கொடி வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி, வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் இதன்போது உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன், தெமட்டகொடயில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்த ஹருணிக்காவின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக, இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் மதுமாதவ அரவிந்த தெரிவித்தார்.