Breaking News

பாதுகாப்பு குறைக்கப்பட்டமையால் வெளியில் செல்ல பயமாக இருக்கிறதாம்! -மஹிந்த கூறுகிறார்

தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமையினால் தனக்கு வெளியில் செல்ல அச்சமாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டதனால் தாம்மால் வெளி நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பிரச்சினை காரணமாக வெளி நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதனை வரையறுத்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமக்கு 89 இராணுவப் படையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் இதில் சிலர் விடுமுறையில் சென்றுள்ள போதிலும், அவர்களுக்கு பதிலீடாக இராணுவ உத்தியோகத்தர்கள் எவரும் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.

இதனால் தமது அன்றாட நடவடிக்கைகளை வரையறுத்துக்கொள்ள நேரிட்டுள்ளதாவும் அவர் கூறினார்.

இதேவேளை, புலிச் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதனால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தமது பாதுகாப்பினை அதிகரித்துத் தருமாறும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.