நான் பழிவாங்கப்படுகிறேன் - கோத்தபாய கவலை
மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான விசாரணைகள் தமக்கு பெரும் தொந்தரவாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஒரே சம்பவம் தொடர்பில் பல தரப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு தரப்பினரின் விசாரணைகளுக்கும் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு ஆகியன ஒரே சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றன.
இவ்வாறான விசாரணைகளை அரசியல் ரீதியான துன்புறுத்தலாகவே கருதப்பட வேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக மட்டும் பத்து தடவைகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள விசாரணைக்குழு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளேன்.
ஓர் சம்பவம் தொடர்பில் ஒரு நிறுவனத்தினால் விசாரணை நடத்தப்படுவதே ஏற்றுக்கொள்ளக் கூடிய நியதியாகும். , எனினும் எனக்கு எதிராக பல்வேறு தரப்பினர் ஒரே விடயம் குறித்து பல தடவை விசாரணை நடத்தி அரசியல் ரீதியாக பழிவாங்கிவருகின்றனர்.