Breaking News

பிர­பா­கரன் வடக்கில் தடுப்­பூசி ஏற்­று­வ­தற்கு இரண்டு தினங்கள் ஒதுக்­கி­யி­ருந்தார் - ராஜித

முப்­பது வரு­ட­கால யுத்தக் காலத்­திலும் வட பகு­தியில் தடுப்­பூசி ஏற்­று­வ­தற்­காக பிர­பா­கரன் இரண்டு
தினங்கள் அனு­மதி வழங்­கி­யி­ருந்தார். இன்று வடக்கில் தடுப்­பூசி வழங்­கு­வது நூற்­றுக்கு நூறு­வீதம் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தென சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

அரச வைத்­தி­ய­சா­லை­களில் இரத்தப் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்கு அனைத்து நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. எனவே தனியார் துறை­யினர் ஊடு­ருவ இட­ம­ளிக்க மாட்டோம் என்றும் அமைச்சர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற சுகா­தார அமைச்சு மற்றும் தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் தொடர்­பான அமைச்­சுக்­களின் குழு நிலை விவா­தத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக யுத்த நிலை காணப்­பட்­டாலும் வடக்கில் நோய் தடுப்பு ஊசி வழங்­கு­வதில் எந்­த­வி­த­மான தடையும் இருக்­க­வில்லை. பிர­பா­கரன் தடுப்­பூசி வழங்­கு­வ­தற்­காக இரண்டு நாட்­களை ஒதுக்­கி­யி­ருந்தார். எனவே தடுப்­பூசி வழங்கும் நட­வ­டிக்­கைகள் வடக்கில் முழு­மை­யாக மேற்­கொள்­ளப்­பட்­டன. அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­களில் சிறப்­பாக மக்­க­ளுக்கு சுகா­தார சேவை­களை வழங்கும் நாடாக இலங்­கையை உலக சுகா­தார அமைப்பு ஏற்றுக் கொண்­டுள்­ளது.

நாட்டில் ஒவ்­வொரு வரு­டமும் 141 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகின்­றனர். இது பாரிய பிரச்­சி­னை­யாகும். எனவே மாண­வர்கள் மத்­தியில் இல­வச எச்.ஐ.வி. பரி­சோ­த­னை­களை நடத்த ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. கடந்த ஆண்­டு­களை விட இவ்­வ­ருடம் டெங்கு நோய் பரவல் கட்­டுப்­பாட்­டுக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. மர­ணங்­களும் குறைந்­துள்­ளன. தொற்றா நோய்கள் தொடர்­பா­கவும் அதிக கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

அரச வைத்­தி­ய­சா­லை­களில் மருந்து தட்­டுப்­பாடு கடந்த ஜூலை மாதத்­துடன் முழு­மை­யாக தீர்த்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இனி மேல் அரச வைத்­தி­ய­சா­லை­களில் இரத்தப் பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­வ­தற்­கான அனைத்து வச­தி­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எனவே தனியார் வைத்­தியசாலைகளுக்கு பரி­சோ­த­னை­க­ளுக்கு செல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அத்­தோடு அவர்கள் ஊடு­ரு­வவும் இட­ம­ளிக்க மாட்டோம்.

21 அரச வைத்­தி­ய­சா­லைகளில் இரவு 10.00 மணி­வ­ரையும் வெளி­நோ­யா­ளர்கள் பிரிவு திறந்து வைக்­கப்­படும். சேலைன் தேவை­களில் 100 க்கு 50 வீதம் சேலைன் உற்­பத்தி இலங்­கையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. வைத்தியர்க­ளுக்கு 20,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசாத வைத்தியர்கள் வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பாக பேசுகின்றனர். சிங்கப்பூரில் மருத்துவக் கல்வி கற்பதற்கு ரூபா 10 இலட்சம் செலவு செய்ய வேண்டும். ஆனால் இலங்கையில் இலவச கல்வியின் மூலமே வைத்தியர்கள் உருவாகின்றனர் என்றார்.