பந்தா? பறவையா குழப்பத்தில் வோக்னரின் சாதனை
நியூஸிலாந்தின் வோக்னர் 160 கி.மீ. வேகத்தில் பந்து வீசியது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கை -
நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இடது கை வேகப்பந்துவீச்சாளரான வோக்னர் பந்துவீசினார்.
இவர் வீசிய 14ஆவது ஓவரின் 4ஆவது பந்தை இலங்கை அணி வீரர் சந்திமால் எதிர்கொண்டார். அப்போது வோக்னர் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பந்துவீசியதாக பதிவானது. பொதுவாக இவர் மணிக்கு 133 கி.மீ. வேகத்தில்தான் பந்துவீசுவார். இதையடுத்து வேகத்தை கணிக்கும் 'ஸ்பீட் கன்' கருவியில் 160 கி.மீ. என எப்படி பதிவானது என்று குழப்பம் ஏற்பட்டது.
வோக்னர் பந்துவீசியபோது ஒரு பறவை பறந்து சென்றுள்ளது. இப்பறவையின் வேகத்தைத்தான் கருவி கணித்துள்ளது என சிலர் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை வோக்னரின் வேகம் உண்மையாக இருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 160 கி.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பந்து வீசிய 8ஆவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.
கடைசியாக கடந்த மாதம் நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 160.04 கி.மீ. வேகத்தில் பந்து வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.