தம்பியை இராணுவமே கைது செய்தது - ஈ.பி.டி.பி.க்கும் தொடர்பு - சகோதரி சாட்சியம்
எனது தம்பி தனியார் கல்விநிலையம் ஒன்றை நடத்திவந்ததோடு பிரதேச ஊடகவியலாளராகவும் செயற்பட்டு
வந்தார். அவரை இராணுவமே கைது செய்தது. இராணுவ முகாமிலிருந்து தொலைபேசி வழியாக என்னுடன் உரையாடினார். என சாட்சியமளித்த சகோதரி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்பு உள்ளதாக சந்தேகம் வெளியிட்டார்.
வந்தார். அவரை இராணுவமே கைது செய்தது. இராணுவ முகாமிலிருந்து தொலைபேசி வழியாக என்னுடன் உரையாடினார். என சாட்சியமளித்த சகோதரி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்பு உள்ளதாக சந்தேகம் வெளியிட்டார்.
காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய அமர்வின் போது துன்னாலை கிழக்கு
கரவெட்டியைச் சேர்ந்த ஜெயரட்ணம் கமலாசினி என்பவர் சாட்சியம் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
எனது தம்பி சும்பிரமணியம் ராமச்சந்திரன் நெல்லியடியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். அத்தோடு அவர் பிரதேச ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவந்தார். 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வழமைபோன்று தனியார் கல்வி நிலையத்தை மூடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை கலிகைச் சந்தியில் வைத்து இராணுவத்தினர் இடைமறித்து அங்கிருந்த முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனை துன்னாலையைச் சேர்ந்த கமல் என்பவர் எம்மிடத்தில் தெரிவித்தார். தன்னுடன் வந்தபோதே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் இராணுவ முகாமில் சென்று கோரும்படியும் கூறினார்.
அதனையடுத்து நாம் மறுநாள் அந்த முகாமிற்குச் சென்றோம். எனது தம்பியின் பெயரைக் கூறி அவர்களிடத்தில் கேட்டோம். அப்போது தமக்கு அவரை யாரென்று தெரியாது என்றும் அவ்வாறான ஒருவரை கைது செய்யவில்லை என்றும் கூறினர்.
இவ்வாறு கூறியதையடுத்து நாம் பல்வேறு இடங்களில் தேடுதல்களை மேற்கொண்டிருந்தகாலங்களில் பருத்தித்துறை முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் நால்வர் டிரக் வண்டி ஒன்றில் எமது வீட்டிற்கு வருகைதந்து எனது தம்பியின் பிறப்பத்தாட்சி பத்திரம் மற்றும் அவருடைய கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றனர்.
2013ஆம் ஆண்டு எமது வீட்டுக்கு அருகிலுள்ள கிராம சேவகர் கூட்டம் ஒன்றுக்காக பல்லப்பை ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்குச் சென்றபோது எனது தம்பியை அங்கு கண்டதாக ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாக எங்களிடத்தில் கூறினார்.
சிறிது காலம் கழித்து தானே எனது தம்பியை நேரில் கண்டதாகவும் அச்சத்தின் காரணமாக அதனை உடன் கூறவில்லை எனவும் குறிப்பிட்டார்.
எனினும் நாம் அச்சத்தின் காரணமாக அந்த இராணுவ முகாமுக்குச் செல்லவில்லை. ஆனால் மனித உரிமை ஆணைக்குழு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகளிடத்தில் முறைப்பாடுகளை பதிவுசெய்தோம். தற்போதுவரை எனது தம்பியை தேடிக்கொண்டி இருக்கின்றேன் என்றார்.