Breaking News

ஐ.எஸ். லண்டனைத் தாக்கத் திட்டம்: பிடிபட்ட தீவிரவாதியிடம் வாக்கு பதிவு

பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 13 ஆம் திகதி இரவு பாரிஸின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். 130 பேர் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய 7 தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறி உயிரிழந்தனர். சலா அப்தேசலாம் என்ற தீவிரவாதி மட்டும் சில நாட்களுக்கு பிறகு பிடிபட்டார்.

அவரிடம் பிரான்ஸ் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ள பிரிட்டிஷ் இளைஞர்களை மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பி மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஐ.எஸ். அமைப்பு சதித்திட்டம் தீட்டியுள்ளது.

அதன்படி தலைநகர் லண்டன் அல்லது பிரிட்டனின் மிகப்பெரிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பிரான்ஸ் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே, பிரிட்டன் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.