Breaking News

அர­சியல் கைதி­களை ஜனா­தி­பதி பொது­மன்­னிப்பில் விடு­விப்பார் - விக்­கி­னேஸ்­வரன்

தாம­த­மின்றி தமிழ் அர­சியல் கைதி­களை உடனே விடு­விப்­பது அர­சாங்­கத்தின் தலை­யாய ­க­ட­மை­யாகும்.
அவ்­வாறு விடு­வித்­தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சி­யா­ளர்­க­ளி­டையே மனித உரி­மையைப் பேணிப் பாது­காக்கும் நோக்கம் உண்­டென்று உணரக்கூடி­ய­தாக இருக்கும். ஜனா­தி­பதி நாட்டின் நற் ­பெயர் கருதி நமது இளைஞர், யுவ­தி­களைப் பொது மன்­னிப்பில் விரைவில் விடு­விப்பார் என்று எதிர்பார்க்­கின்றேன் என வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

மக்­களின் காணி­களை இரா­ணுவம் கையேற்று வைத்­தி­ருப்­பது சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்­டத்­திற்கு முர­ணா­னது. எமது நாடு மனித உரி­மை­களைப் பேணிப் பாது­காத்து வர அவாக் கொண்­டுள்­ளது என்­பது உண்­மை­யெனில் இரா­ணு­வத்­தி­னரை வெளி­யேற்றி அவர்கள் கையேற்ற காணி­களை அவற்றின் சொந்­தக்­கா­ரர்­க­ளுக்குக் கைய­ளிப்­பதே பொறுப்­பான செயற்­பா­டாகும் என்றும் வடக்கு முதல்வர் சுட்­டிக்­காட்­டினார். மனித உரி­மை­களைப் பேணு­ப­வர்கள் நாம் என்று இலங்கை அர­சாங்­கத்­தினர் மார்­தட்டிக் கூறு­வ­தா­க­வி­ருந்தால் தமிழ் மக்­களின் அவ­லங்­களை நீக்கும் விதத்தில் அவர்­களின் சுய­நிர்­ணய உரி­மையை மதித்து அவ்­வு­ரித்தின் அடிப்­ப­டையில் ஒரு நிரந்­த­ர­மான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்­வ­ர­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வட­மா­காண சபையில் நேற்று நடை­பெற்ற 40 ஆவது அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், உலக மனித உரி­மைகள் தின­மான டிசம்பர் பத்தாம் திகதி பற்றி இந்தச் செய்­தியை இவ்­வ­ருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் திக­தி­யன்று நான் தயா­ரிக்க முற்­படும் போது ஒரு முக்­கிய விடயம் எனக்குப் புலப்­பட்­டது.

இவ்­வ­ருடம் முற்­ப­கு­தியில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை­யினால் டிசம்பர் மாதம் ஒன்­பதாம் திக­தி­யா­னது முதன் முத­லாக இனப்­ப­டு­கொ­லையில் பலி­யா­னோரின் நினை­வு­றுத்தும் நாளா­கவும் அவர்கள் மாண்பை வலி­யு­றுத்தும் நாளா­கவும், இனப்­ப­டு­கொலைக் குற்­ற­மி­ழைப்பைத் தடுக்கும் நாளா­கவும் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளமை தெரி­ய­வந்­தது. எனவே இனப்­ப­டு­கொ­லைக்குப் பலி­யா­னோரை நினைவில் இருத்தி இச் செய்­தியைத் தயார்­ப­டுத்­தினேன்.

ஒரு நாட்டின் தனி மனி­தர்­களை அல்­லது அங்கு வசிக்கும் ஒரு மனிதக் குழுக் கூட்­டத்தை பாரிய அதி­கா­ரங்­களைக் கொண்ட அந் நாட்டின் அரசு முறை­யற்ற விதத்தில் நடத்தித் துன்­பு­றுத்­தலைத் தவிர்க்க ஏற்­பட்­டதே மனித உரி­மை­களை நோக்­கிய பய­ண­மாகும். யூத மக்­க­ளுக்கு அக்­கா­ல­கட்­டத்தில் நேர்ந்த அவ­லங்­களே, சர்­வ­தேசச் சட்­டத்தின் கவ­னத்தை நாடு­களின் உரி­மை­களில் தங்­கி­யி­ருப்­பதை விடுத்து, ஐக்­கிய நாடுகள், தனி மனித உரி­மைகள் பற்றிச் சிந்­தித்துச் செய­லாற்றும் படி­யாக 1948 ஆம் ஆண்டில் திசை திருப்­பி­யது. முதலில் கொண்டு வரப்­பட்ட உல­க­ளா­விய மனித உரி­மைகள் பற்­றிய விளம்பல் ஆவ­ணத்தில் காணப்­பட்ட ஒவ்­வொரு உரித்தும் பின்னர் வந்த சிறப்புக் கூட்­டங்­க­ளிலும் விளம்­பல்­க­ளிலும் விரி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டன. குறிப்­பிட்ட உரித்­துக்­களை நிலை­நாட்­டவே மனித உரி­மைகள் சபையும் மனித உரி­மை­க­ளுக்­கான உயர் ஸ்தானி­கரின் அலு­வ­ல­கமும் உரு­வாக்­கப்­பட்­டன.

மேற்­படி ஐக்­கிய நாடுகள் சபை ஆவ­ணங்­களில் அறி­விக்­கப்­பட்­டி­ருக்கும் கோட்­பா­டுகள் இலங்­கையைப் பொறுத்த வரையில் மிக முக்­கி­ய­மா­னவை. அதுவும் தமிழ் மக்கள் இன்று வரை அனு­ப­வித்து வரும் அல்லல் அவ­லங்­க­ளுடன் மிக நெருங்­கிய தொடர்­புகள் கொண்­ட­வை­யாகும். தொடர்ந்து வந்த இலங்கை அர­சாங்­கங்­க­ளினால் தமிழ் மக்­களின் உரித்­துக்கள் தனி­ம­னித ரீதி­யிலும் நிர்­ண­யிக்­கப்­பட்ட மக்கள் கூட்டம் என்ற ரீதி­யிலும் காலா­கா­ல­மாக மீறப்­பட்டு வந்­துள்­ளன. குடி­யியல் மற்றும் அர­சியல் உரித்­துக்கள் சம்­பந்­த­மான ஐக்­கிய நாடுகள் சம­வாய ஆவ­ணத்தில் நிர்­ண­யிக்­கப்­பட்ட மக்கள் கூட்­டங்கள் யாவற்­றிற்கும் சுய­நிர்­ணய உரி­மை­யா­னது உறுதிப் படுத்­தப்­பட்­டுள்­ளது.

சம­வா­யத்தின் உறுப்­புரை (1)ல் பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டுள்­ளது - “சகல மக்கள் கூட்­டங்­களும் சுய நிர்­ணய உரித்­தை­யு­டை­ய­வர்கள். அவ்­வு­ரித்தின் அடிப்­ப­டையில் அவர்கள் தமது அர­சியல் நிலையை வகுக்க முடியும். அத்­துடன் சுதந்­தி­ர­மாகத் தமது பொரு­ளா­தார, சமூக, கலா­சார அபி­வி­ருத்­தியை வழி­ந­டத்திச் செல்­ல­மு­டியும்”. இந்த சுய­நிர்­ணய உரி­மைதான் தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு மறுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் மிக­முக்­கிய மனித உரி­மை­யான சமத்­து­வத்­திற்­கான உரித்து இலங்கை இயங்கத் தொடங்­கிய காலம் முதல் தமிழ் மக்­க­ளுக்கு மறுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

தனிப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்­கான உயி­ருக்­கான உரித்து கூட அர­சாலும் அதன் முகா­மை­க­ளாலும் நீதிக்குப் புறம்­பான படு­கொ­லை­களால் வழி­ந­டத்­தப்­பட்­டுள்­ளன. நடந்த மனிதப் படு­கொ­லை­க­ளுக்கு இது­வ­ரையில் பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்லை. குடி­யியல் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சம­வா­யத்தில் கூறப்­பட்­டி­ருக்கும் மாற்­ற­மு­டி­யாத உரித்­துக்­க­ளா­கிய சுதந்­தி­ரத்­திற்­கான உரித்து நூற்­றுக்­க­ணக்­கி­லான தமிழ் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு இன்றும் மறுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்கள் விளக்­க­மற்ற விளக்­க­ம­றி­யல்­க­ளிலும் விளப்­ப­மற்ற விளக்­கங்­க­ளிலும் சிறைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள்.

தொடர்ந்து அவர்­களைச் சிறைப்­ப­டுத்தி வைத்தல் இலங்கை அர­சாங்கம் சுதந்­தி­ரத்­திற்­கான மனித உரி­மையை மீறும் செய­லாகும். ஆகவே தாம­த­மின்றி தமிழ் அர­சியல்க் கைதி­களை உடனே விடு­விப்­பது அர­சாங்­கத்தின் தலை­யா­ய­க­ட­மை­யாகும். அவ்­வாறு விடு­வித்­தால்த்தான் எமது நாட்டில் எமது ஆட்­சி­யா­ளர்­க­ளி­டையே மனித உரி­மையைப் பேணிப் பாது­காக்கும் நோக்கம் உண்­டென்று உணரக் கூடி­ய­தாக இருக்கும். ஜனா­தி­பதி நாட்டின் நற்­பெயர் கருதி நமது இளைஞர் யுவ­தி­களைப் பொது மன்­னிப்பில் விரைவில் விடு­விப்பார் என்று எதிர்பார்க்­கின்றேன். எமது வட­மா­கா­ண­ச­பையின் இவ்­வ­ருடப் பெப்­ர­வரி மாதத் தீர்­மா­ன­மா­னது தொடர்ந்து நடை­பெற்று வரும் தமிழ் மக்­களின் படு­கொ­லைகள் இனப்­ப­டு­கொ­லையே என்று அடை­யாளம் காட்­டி­யது.

அந்த இனப்படு­கொ­லை­களின் சூத்­தி­ர­தா­ரி­களை அடை­யாளம் கண்டு அவர்கள் மீது விசா­ரணை நடத்­து­வது இலங்கை அர­சாங்­கத்தின் கடப்­பாடு என்­பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்­டி­ய­தில்லை. ஆனால் அரச தலை­வர்­களின் அண்­மைய கால அறிக்­கைகள் முரண்­பட்ட விதத்தில் அரங்­கேறி வரு­கின்­றன. இலங்கை பற்­றிய ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர் ஸ்தானி­கரின் அறிக்­கையின் அடிப்­ப­டையை அடி­யோடு மறுப்­ப­ன­வா­கவே அவை அமைந்­துள்­ளன. 

பின்­ஹெய்ரோ கோட்­பா­டுகள் என்­பன யுத்தம் போன்ற கார­ணங்­களால் இடம்­பெ­யர்ந்த மக்­களை அவர்­களின் முன்னர் வாழ்ந்த வதி­வி­டங்­களில் மீள்­கு­டி­யேற்­று­வதை வலி­யு­றுத்­து­கின்­றன. இன்று எமது மாகாண மக்­களின் பெரு­வா­ரி­யான காணிகள் இரா­ணு­வத்­தினர் கைவசம் உள்­ளன. இவ்­வாறு மக்­களின் காணி­களை இரா­ணுவம் கையேற்று வைத்­தி­ருப்­பது சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்­டத்­திற்கு முர­ணா­னது. எமது நாடு மனித உரி­மை­களைப் பேணிப் பாது­காத்து வர அவாக் கொண்­டுள்­ளது என்­பது உண்­மை­யெனில் இராணுவத்தினரை வெளியேற்றி அவர்கள் கையேற்ற காணிகளை அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கையளிப்பதே பொறுப்பான செயற்பாடாகும்.

தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் மனித உரிமைகளைப் பேணாது தொடர்கதையாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளன. இவ்வருடம் ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் கூட வெள்ளைவான் கடத்தல்கள் நடைபெற்றுள்ளன. மனித உரிமைகளைப் பேணுபவர்கள் நாம் என்று இலங்கை அரசாங்கத்தினர் மார்தட்டிக் கூறுவதாகவிருந்தால் தமிழ் மக்களின் அவலங்களை நீக்கும் விதத்தில் அவர்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து அவ்வுரித்தின் அடிப்படையில் ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.

அப்பொழுதுதான் உலக மனித உரிமைகள் தினம் இலங்கைக்குப் பொருந்தும் ஒரு தினமாக ஏற்றுக்கொள்ளப்படலாம் என்றார்.