விலகினார் தம்மிக்க பிரசாத்
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத் காயம் காரணமாக நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட்
போட்டியிலிருந்து விலகியிருக்கிறார்.
அவருக்கு பதிலாக நியூஸிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாட இலங்கை அணிக்கு புதிய வீரராக பந்துவீச்சாளர் விஷ்வ பெர்ணான்டோ இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதன்படி டெஸ்ட் போட்டிக்கான அணி நியூஸிலாந்து சென்றடைந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 10ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் சபை லெவன் அணியுடன் நடைபெற்றபயிற்சிப் போட்டியின் போது தம்மிக்க பிரசாத் காயத்திற்கு உள்ளானார்.
இந்நிலையிலேயே அவருக்கு பதிலாக விஷ்வ பெர்ணான்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.