கொழும்பு துறைமுக அபிவிருத்தித்திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்
இலங்கை அரசாங்கத்தினால் விரைவில் மீண் டும் ஆரம்பிக்கப்படுமென சீனா மிகவும் வலுவான முறையில் நம்புகிறது என்று சீன
வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய நாடுகளுக்கான பிரிவின் பணிப்பாளரும், கொன்ஸியூலருமான சென்பெங் தெரிவித்தார்.

சீனாவானது
இலங்கை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் அபிவிருத்தியில் பாரிய கரிசனையை செலுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஊடக சுற்றுலா ஒன்றை மேற்க்கொண்டு விஜயம் செய்திருந்த ஊடகவியலாளர் குழுவுடன் நேற்றுமுன்தினம் சீன வெளிவிகார அமைச்சின் அலுவலகத்தில் நடாத்திய சந்திப்பின்போது சென்பெங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஆயிரம் வருடங்களைத் தாண்டிய மிகவும் நெருக்கமான சிறந்த உறவு காணப்படுகிறது. இந்த நெருக்கமான இரு தரப்பு உறவை மேலும் வலுவூட்டுவதே சீன அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காகவே சீன அரசாங்கம் பாரிய வேலைத்திட்ட முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயமும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீன விஜயமும் இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய உறவினைக் காட்டுகின்றன. இலங்கையில் புதிய அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் பதவிக்கு வந்ததும் சீன அரசாங்கம் வாழ்த்து தெரிவித்ததுடன் இலங்கைக்கு விசேட தூதுவரையும் அனுப்பியிருந்தது. அத்துடன் சீனாவுடனான உறவு தொடர்பில் இலங்கையின் புதிய அரசாங்கம் சாதகமான செயற்பாடுகளை மேற்கொள்வது எமக்கு மகிழ்ச்சியளித்துள்ள விடயமாகும்.
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களிலும் பொருளாதார அபிவிருத்தியிலும் உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராக இருக்கின்றது. சீனாவினதும் இலங்கையினதும் இரு தரப்பு உறவு வலுவடைய வேண்டும் என்பது எனது நோக்கமாகும். இலங்கைக்கு பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் சீனா எதிர்பார்த்துள்ளது. சீனாவானது மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்ற நாடாக உருவெடுத்துள்ளது.
அந்த வளர்ச்சியின் பயனை இலங்கை உள்ளிட்ட சீனாவின் அயல் நாடுகளும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அதற்காகவே நாங்கள் பாரிய முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக சீனா இலங்கையின் கைத்தொழிற்துறை மற்றும் உட்கட்டமைப்பு துறையில் பாரிய உதவிகளை செய்வதற்கு எதிர்பார்க்கிறது.
அவ்வாறான கொள்கையுடனேயே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் எமது இருதரப்பு உறவில் சில சிக்கல்கள் எற்பட்டதைப் போன்ற நிலைமை உருவானது. ஆனால் துறைமுக நகர அபிவிருத் திட்டம் தவிர்ந்த இலங்கையில் சீனா மேற்க்கொண்டு வரும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இடம்பெற்று வருகிறது. அதன்படி கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டமும் புதிய அரசாங்கத்தினால் விரைவில் ஆரம்பிக்கப்படுமென நம்புகிறோம்.
இது தொடர்பான அறிவிப்பை இலங்கை அரசாங்கம் விரைவில் வெளியிடுமென எதிர்பார்க்கிறோம். குறிப்பாக கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டமானது இலங்கையின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். இந்தத் திட்டத்தில் இரண்டு நாடுகளும் நன்மையடையவுள்ளன என்பதே உண்மையாகும். அனைத்துத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கிறோம். இலங்கை உள்ளிட்ட தெற்காசியாவின் அனைத்து நாடுகளுடனனும் நாங்கள் சிறந்த உறவை வளர்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்தியாவுடன் எமக்கு தற்போது பரஸ்பரம் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன. சீனாவின் "ஒரு பாதை" என்ற எண்ணக்கருவானது தெற்காசிய நாடுகளுக்கு நன்மை பயப்பதாக அமையும்.
இந்தப் பிராந்தியத்தில் கடற்பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த கடற்பாதுகாப்பு செயற்திட்டத்திற்கு இலங்கையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இலங்கையின் அமைவிடம் ஒரு முக்கிய காரணமாக காணப்படுகின்றது.
கேள்வி : துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை இலங்கை முன்னெடுக்கும் என நம்புகிறீர்களா ?
பதில் : இலங்கையின் கடந்த அரசாங்கத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு அடிப்படையிலேயே துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது புதிய அரசாங்கம் தற்காலிகமாக அதனை நிறுத்தியுள்ளது. எனினும் ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு விட்டன. அந்த வகையில் இந்த திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படுமென நம்புகிறோம்.
கேள்வி: துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் என்ன கூறுகிறது ?
பதில் : அந்த நிறுவனத்துடன் நாங்கள் நெருங்கிய தொடர்புடன் இருக்கின்றோம்.
கேள்வி: திட்டம் இடைநிறுத்தப்பட்டதால் நிறுவனத்துக்கு நஷ்டமா?
பதில்: சில சிக்கல்கள் உள்ளன. இதன் செலவு மிக பெரியது. ஆனால் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டதென்பது எனக்கு தெரியாது.
கேள்வி: இந்த திட்டத்தினூடாக சில ஏக்கார் காணிகள் சீனாவுக்கு சொந்தமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இது இறைமை சம்பந்தப்பட்ட விடயம். அதனால்தான் புதிய அரசாங்கம் இதனை தடுத்து நிறுத்தியுள்ளதென நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்: நாங்கள் அப்படி நினைக்கவில்லை. ஒருவேளை நீங்கள் அப்படி நினைக்கின்றீர்களா? இது தவறான அபிப்பிரயாகமாகும். நாங்கள் இலங்கைக்கு உதவி செய்கிறோம். அதற்கு மாறாக நாங்கள் எதையும் கேட்கவில்லை இந்த திட்டத்தினூடாக இரண்டு நாடுகளுக்கும் நன்மையுள்ளது.
கேள்வி: அப்படியானால் திட்டத்தை மீள ஆரம்பிக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: புதிய அரசாங்கம் பதவிக்கு வந்திருக்கிறது. ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது எவ்வாறெனினும் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று எனது எதிர்பார்ப்பாகும். சீனா மேலும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. சீன நிறுவனங்களிடம் பாரிய தொழில்நுட்பம் காணப்படுகிறது எனவே அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது இலக்கு.
கேள்வி: எவ்வாறான புதிய திட்டங்கள் ஆரம்பிக்கவுள்ளன?
பதில்: இதனை தற்போது கூற முடியாது ஆனால் இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வேலைத் திட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம் என்றார்.
இவ்வாறு அவர் நேர்காணலின் போது குறிப்பிட்டார்.