20 அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து ஆராய்வு! சுவாமிநாதன்
தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக புனர்வாழ்வு, புனரமைப்பு இந்து விவகார மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியமை மற்றும் பல்வேறு பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவரர்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலைச் செய்வதற்கான முயற்சிகள் மேற்ககொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.