உயர்மட்டப் பேச்சுக்களுக்காக இலங்கை வருகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்
உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே அடுத்தமாதம் முதல் வாரத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இலங்கைக்கும், நோர்வேக்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான ஒத்துழைப்புகள் குறித்த உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில், 2014ஆம் ஆண்டு 30 மில்லியன் டொலருக்கு வர்த்தகம் இடம்பெற்றிருந்தது.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக நோர்வே ஆர்வம் காட்டி வரும் நிலையிலேயே, நோர்வே வெளிவிவகார அமைச்சரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோர்வேயின் முயற்சிகள் தோல்வியில் முடிந்த பின்னர், நோர்வேயுடன் முன்னைய அரசாங்கம் நெருக்கமான உறவுகளைப் பேணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.