தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை – மாவை
தமிழ் மக்கள் பேரவையில் நாம் இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் திங்கள் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் பேரவை எனும் பெயரில் இரகசியமாக கூட்டம் நடாத்தபப்ட்டு உள்ளது. வெளியில் சொல்லப்படும் கருத்து நாங்கள் அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்று பிரச்சாரம் செய்கின்றார்கள்
தமிழரசி கட்சியுடனோ, அல்லது அதன் தலைமையுடனோ யாரும் பேசவில்லை அப்படி ஒரு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. அதேவேளை எமக்கும் அந்த அவசியம் இல்லை என நான் நம்புகின்றேன்.
தமிழரசு கட்சி சார்பில் பேராசிரியர் சி.க சிற்றம்பலம் கலந்துகொண்டதை நாங்கள் அறிவோம். அவர் தான் தமிழரசு கட்சியின் அனுமதியுடன் தான் வந்துள்ளேன் என தெரிவித்து இருக்கின்றார்.
அவர் சொல்வது உண்மை அல்ல, அவர் ஒரு பேராசிரியர் நீண்டகாலமாக தமிழரசு கட்சியில் இருப்பவர். மூத்த துணை தலைவர். அவர் இப்படி ஒரு கூட்டணி கூடுகின்றது, என்ன நோக்கத்தோடு கூடுகின்றோம். எனபது பற்றி எமக்கு தெரிய படுத்தி இருக்கலாம்.அல்லது அதன் ஏற்பாட்டாளர்கள் எமக்கு தெரிவித்து இருக்கலாம்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படுவோம். என கூறுகின்றார்கள். அப்படி ஆயின் எதற்காக, இரசியமாக மூடிய அறையில் நடத்த வேண்டும்.தங்களுக்கு விரும்பியவர்களை அழைத்து கூட்டத்தை நடாத்தி விட்டு அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். என தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி-