உலகில் மிகவும் ஆபத்தான பிரதேசமாக முகமாலை!
உலகில் மிகவும் ஆபத்தான- மிதிவெடி மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்கள் உள்ள பிரதேசமாக முகமாலை பிரதேசம் உள்ளது என மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் நிறுனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 13 வருடங்களாக கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் குறித்த நிறுவனம் அண்மையில் முகமாலை பிரதேசத்தில் இரண்டு இலட்சம் மிதி வெடிகளை அகற்றியிருந்தது.குறித்த நிறுவனத்தின் தகவலின் படி ஈராக் அல்லது முகமாலை பிரதேசமா உலகில் ஆபத்தான மிதிவெடி மற்றும் வெடிபொருள் ஆபாயம் உள்ள பிரதேசம் என்பது தொடர்பில் ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது.
ஆனால் ஈரர்ககை விட முகமாலை பிரதேசத்திலேயே மிதிவெடி மற்றும் கண்ணி வெடிகளுக்கு அப்பால் பொறி வெடி மற்றும் ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுகிறது.உலகில் வேறு எங்கும் இவ்வாறு வெடிப்பொருட்கள் காணப்படவில்லை. கடந்த 13 வருடங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார் ஆகிய பிரதேசங்களில் இதுவரைக்கும் இரண்டு இலட்சம் மனித எதிர்ப்பு மிதிவெடிகளும்,41601 பரந்து கிடந்த வெடிப்பொருட்களும், 22778 வெடிக்காத வெடிப்பொருட்களும்,875 வாகன எதிர்ப்பு வெடிப்பொருட்களும்,ஆறு இலட்சத்து 71724 வெடிப்பொருட்களின் சிறிய துண்டுகளும், மீட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.