Breaking News

கூட்டு எதிர்க் கட்சிகளின் விசேட கூட்டம் இன்று நண்பகல்

கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விசேட கூட்டமொன்று இன்று நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது எதிர்க் கட்சிகளுக்கு வழங்கப்படும் நேரத்தில் அநீதமிழைக்கப்படுவது குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கூட்டு எதிர்க் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்கு பொறுப்பாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது